எலியால் சிதைந்த படகு – மகிழ்ச்சியில் வனத்துறை அதிகாரிகள்….. காரணம் என்ன தெரியுமா….?

விழுந்த மரம், சிதைந்த படகு, மகிழ்ச்சியில் வனத்துறை என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. படகு ஒன்று சிதைந்துள்ளதாக கூறுகின்ற போதும், அது தொடர்பில் வனத்துறை மகிழ்ச்சி வெளியிட்டதாக வெளியான செய்திதான் நிச்சயமாக பலருக்கும் அதிர்ச்சியளித்திருக்கும்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜேர்மனியில் படகு ஒன்றில் ஒரு தம்பதி பயணித்துக் கொண்டிருக்கும்போது அவர்களது படகின் மீது ஒரு மரம் விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் அந்த தம்பதி உயிர் தப்பினாலும் படகு சேதமடைந்ததால் அவர்களுக்கு ஆயிரக்கணக்கான யூரோக்கள் நஷ்டத்தை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் கவலையில் இருக்கும் அதே நேரத்தில் வனத்துறையினரோ மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதற்கு காரணம் என்னவென்றால், அந்த மரம் beaver என அழைக்கப்படும் நீர் எலி என்னும் விலங்கு கடித்ததால் விழுந்துள்ளது என்பதுதான்.

20 மீற்றர் உயரமுடைய அந்த மரத்தை beaver கடித்து விழச் செய்துள்ளது. அதாவது beaver என்னும் உயிரினம் ஐரோப்பாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு விலங்காக கருதப்படுகிறது.

ஒரு காலத்தில் ஐரோப்பா எங்கும் பரவிக் காணப்பட்ட ஐரோப்பிய – ஆசிய beaver, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவற்றின் ரோமத்திற்காகவும், மாமிசம் உட்பட வேறு பல காரணங்களுக்காகவும் மக்கள் அவற்றைக் கொல்லத் தொடங்கியதாலும், வாழ இடமில்லாததாலும் அவற்றின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து 1,200 ஆனது.

தற்போது அவை மீண்டும் இப்பகுதியில் காணப்படுவது வனத்துறையினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது“ இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசும் சம்பவமாகவும் மாறியுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்