பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் ஆபாசப் புகைப்படங்கள்…..!! பேஸ்புக் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு….!!

இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய சமூக வலைத்தளமாக பேஸ்புக் விளங்குவதால் பல சீர்கேடான தகவல்களும் பகிரப்பட்டு வருகின்றது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பேஸ்புக் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.இதேபோன்றே சிறுவர்களின் ஆபாசப் புகைப்படங்களும் உலகளவில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகின்றன.இவ்வாறான சுமார் 8.7 மில்லியன் புகைப்படங்களை கடந்த மூன்று மாதங்களில் பேஸ்புக் வலைத்தளத்திலிருந்து அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

இவற்றில் 99 சதவீதமானவை மற்றைய பேஸ்புக் பயனர்கள் ரிப்போர்ட் செய்வதற்கு முன்பாகவே நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இவ் வகையான புகைப்படங்கள் பகிரப்படுவது கடந்த காலங்களை விடவும் வெகுவாக அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்