மிகவும் ஏழ்மையான நிலையிலும் இலங்கைக்கு பெருமை சேர்த்த ஏழைச் சிறுமியின் பெரும் தன்மை…..!!

மாதாந்தம் எனக்கு கிடைக்கும் 75,000 ரூபாய் பணத்தை ஒருமுறை மாத்திரமே பெற்றுக் கொண்டேன் என ஆர்ஜெண்டீனாவில் இலங்கைக்கு முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்த சிறுமி பாரமி வசந்தி தெரிவித்துள்ளார்.ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்ற கோடைக்கால 3ஆவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைத் தாண்டல் ஓட்டப் போட்டியில் சிறுமி பாரமி வசந்தி மூன்றாவது இடத்தைப் பெற்று இலங்கைக்கு முதல் வெண்கலப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதுவே 3ஆவது இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த முதல் பதக்கமாகும்.சிலாபத்தில் ஏழ்மையான மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய போதே குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, விளையாட்டு அமைச்சு எனது மாதாந்த தேவைகளுக்காக 75,000 ரூபாவை தருவதாக உறுதியளித்திருந்தது. ஆனால் அதை நான் ஒரு முறை மாத்திரமே பெற்றுக்கொண்டேன்.எனது பெயரில் 1.5 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி வைப்பு செய்திருந்தார். நான் அந்த பணத்தின் வட்டியை பயன்படுத்தினேன். மற்றும் எனது பயிற்றுவிப்பாளர் அவருடைய பணத்தை பயன்படுத்தினார்’ எனவும் சிறுமி பாரமி வசந்தி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்