2017 இல்கும்பம் ராசியினருக்கான முழுமையான சிறப்பு பலன்கள்…

கும்ப ராசி நேயர்களே!… ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்தில் வருவது தொழில் லாபத்தை அதிகரிக்கச் செய்யும்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுப பலன்களை கொடுக்கும். ராகு ஆறாமிடத்திற்கு வருவது எதிரிகளை வெல்லும் திறனை கொடுக்கும் கேது பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது தொழில் தொடர்பான வெளிநாட்டு தொடர்புகளைக் கொடுக்கும்

இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் எதிர்பாராத பண வரவு தருவதாக இருக்கும். செப்டம்பர் மாதம் குரு உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் மதிப்பு கௌரவம் அந்தஸ்து அதிகரிக்கும்.

ஜனவரி – தொழிலில் லாபம்
ஆண்டின் துவக்கத்தில் பதினொன்றாமிடத்தில் இருக்கும் சூரியன் தொழிலில் லாபத்தை அதிகமாக தருவார் இம்மாதம் 14ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு சூரியன் வருகிறார் அரசாங்க ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும். செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி இரண்டாம் இடத்திற்கு வருகிறார் நிலம் வீடு வகையில் நன்மை உண்டாகும். புதன் இம்மாதம் முழுவதும் பதினொன்றாமிடத்தில் இருப்பது கமிஷன் ஒப்பந்தத் தொழிலில் லாபத்தை அதிகரிக்கச் செய்யும் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருப்பது எதிர்பாராத வகையில் பண வரவைக் கொடுக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்மராசியில் இருப்பது முக வசீகரத்தை அதிகரிக்கச் செய்யும் இம்மாதம் 27ம் தேதி இரண்டாமிடத்திற்கு மாறுகிறார் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். சனி வருட ஆரம்பத்தில் பத்தாமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவது தொழிலில் லாபம் அதிகரிக்கும் ராகு ஏழாமிடத்தில் இருப்பது வியாபாரத்தை அதிகரிக்கச் செய்யும் கேது ஜென்ம ராசியிலிருப்பது மன சிந்தனை தெளிவாக இருக்கும்..

பிப்ரவரி – அதிகாரிகள் ஒத்துழைப்பு
சூரியன் இம்மாதம் 13ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதன் இம்மாதம்03ம் தேதி உங்கள் ஜென்மராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும் 22ம் தேதி ஜென்ம ராசிக்கு வருவது புத்தி சாதுரியம் அதிகரிக்கும். செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் – பண வரவு
சூரியன் இந்த மாதம் 14ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் அரசு நிறுவனங்கள் மூலம் பண வரவு உண்டாகும். செவ்வாய் 02ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும். புதன் 11ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது வாக்கு வன்மை அதிகரிக்கும் 27ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் எதிர்பார்த்திருந்த சுப மங்கல தகவல் வந்து சேரும். குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் – எண்ணம் நிறைவேறும்
சூரியன் இந்த மாதம் 14ம் தேதி மூன்றாம் இடத்திற்கு வருகிறார் அரசு தொடர்பான பயணம் உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் – வெற்றி கிடைக்கும்
இந்த மாதம் சூரியன் 15ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். புதன் இந்த மாதம் 03ம் தேதி நான்காம் இடத்திற்கு வருகிறார் கல்வி நிலை சிறப்படையும் 18ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கமிஷன் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை – மன தைரியம்
சூரியன் இந்த மாதம் 17ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் மன தைரியம் அதிகரிக்கும் செவ்வாய் 11ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் எதிரிகளை வெல்லும் திறன் உண்டாகும். புதன் இந்த மாதம் 03ம் தேதி ஆறாம் இடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் கருத்து வேறுபாடு உண்டாகும் 21ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும் சுக்கிரன் 26ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் – உறவினர்களுடன் நல்லுறவு
சூரியன் 17ம் தேதி உங்கள் ஏழாமிடத்திற்கு வருகிறார் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும் செவ்வாய் 27ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நன்மை விளையும். சுக்கிரன் 21ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் ராகு இம்மாதம் 18ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் மன தைரியம் அதிகரிக்கும் கேது 18ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் திருக்கோயில்களுக்கு டொனேசன் கொடுப்பீர்கள். இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் – திடீர் யோகம்
சூரியன் 17ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் திடீர் யோகம் உண்டாகும். செவ்வாய் 13ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை புதன் 27ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். குரு 12ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சுக்கிரன் 15ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் – வெளிநாடு பயணம்
சூரியன் 18ம் தேதி உங்கள் ராசிக்கு ஒன்தாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகம் தொடர்பாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் செவ்வாய் 30ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பூர்வீக சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் புதன் 30ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். சுக்கிரன் 15ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் – லாபம் அதிகரிப்பு
சூரியன் 17ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் வியாபாரம் சிறப்படையும் புதன் 02ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் வியாபாரம் மேன்மையடையும் 24ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தொழில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் 03ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் 26ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் எல்லா செயல்களும் சிறப்படையும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் – சம்பள உயர்வு
சூரியன் 16ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் சம்பள உயர்வு உண்டாகும். சுக்கிரன் 20ம் தேதி உங்கள் பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

 

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்