நீண்ட நாட்களின் பின் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்……!! உலகத்தை வியக்க வைத்த இலங்கைச் சிறுமி…..!! குவியும் பாராட்டுக்கள்….!!

ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்று வரும் கோடைக்கால 3ஆவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.குறித்த போட்டியில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைத் தாண்டல் ஓட்டப் போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா என்ற 16 வயதுச் சிறுமி, மூன்றாவது இடத்தைப் பெற்று இலங்கைக்கு முதல் வெண்கலப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

 

இவர் சிலாபத்தில் ஏழ்மையான மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.இந்த நிலையில் குறித்த சிறுமிக்கு இலங்கையின் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் டுவிட்டர் தளத்தில் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அத்துடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹெல ஜயவர்தனவும் குறித்த சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்