பிரபல பெண்கள் பாடசாலையில் வெடிகுண்டு மிரட்டல்….சிதறியடித்து பாய்ந்தோடிய மாணவிகள்…!! முப்படையினரும் களத்தில்…!!

நீர்கொழும்பு நிவிஸ்டட் மகளிர் கல்லூரியில் இன்று காலை குண்டுப் புரளி ஏற்பட்டதன் காரணமாக பாடசாலையில் பெரும் பதற்றம் நிலவியது.இன்று காலை பாடசாலைக்கு வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பில் பாடசாலையில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார்,விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர், கடற்படையினர், விமானப் படையினர் ஆகியோர் இணைந்து தேடுதல் மேற்கொண்டனர்.ஆயினும், எந்தவொரு குண்டும் அகப்படவில்லை. தேடுதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக மாணவிகள் பாடசாலை மைதானத்தில் ஒன்று சேர்க்கப்பட்டனர்.

இதுதொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு பாடசாலை அபிவிருத்தி சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனுமதியளிக்கவில்லை.இதன் காரணமாக ஊடகவியலாளர்களுக்கும் பாடசாலை அபிவிருத்திச் சபையைச் சேர்ந்த உறுப்பினர்களுக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது.

இன்று பிற்பகல் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு இடம்பெறவுள்ள நிலையில் குண்டு புரளி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்