பேஸ்புக் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்; பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகமாக கிடைக்கப்பெறுவதாக கணினி அவசரப் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சமூக வலைதளங்கள் தொடர்பான இரண்டாயிரத்து இருநூறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக போலி முகநூல் கணக்குகள் தொடர்பான முறைப்பாடுகளே அதிகம் கிடைத்துள்ளதாக அந்தப் பிரிவின் சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பொறியிலாளர் ரொஷான் சந்தரகுப்த தெரிவித்துள்ளார்.இவ்வாறான நடவடிக்கைகள் இன்னொருவரின் புகைப்படத்தை வைத்து இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் குறிப்பாக பெண்களின் புகைப்படங்களை அவர்களின் முகநூலிலிருந்து திருடிக்கொள்ளும் நபர்கள் அந்தப் புகைப்படங்களை வைத்து புதிய கணக்குகளை ஆரம்பிப்பதுடன் அநாகரிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறான நிலைமைகள் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காகவே பெரும்பாலும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் இதுகுறித்து அவதானமாக இருக்கவேண்டும் என எச்சரித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்