வட்ஸ்அப்பில் வந்துள்ள புதிய அப்டேட்..! உங்களுக்கு தெரியுமா?

இனி வட்ஸ்-ஆப் செயலியில் யூடியுப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற மற்ற செயலியின் விடியோக்களை, சாட்டிங் செய்தபடியே பார்க்கலாம். பொதுவாக ஒரு விடியோ லிங்கை வாட்ஸ்அப்பில் பகிர்ந்தால் அந்த லிங்கை கிலிக் செய்து யூட்டியுபுக்கு அல்லது அந்த வீடியோ பதிவிடப்பட்ட தளத்திற்கு சென்று பார்த்து விட்டு, பின்னர் அது குறித்து பேச முடியும் என்பது இது நாள் வரை இருந்த வழி.

தற்பேது இதை எளிமைபடுத்த உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். இந்த ஆண்டு துவங்கியதில் இருந்தே பல அப்டேட்டுகளை கொடுத்துக்கொண்டே இருக்கும் வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் தான் ‘ஸ்வைப் டு ரிப்லை’ (swipe to reply) என்ற சேவையை தன் ஆன்டிராய்ட் போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.

தற்போது தனது அடுத்த வர்சனில் பிக்சர் இன் பிக்சர் (picture in picture) வசதியை வழங்க உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். இந்த வசதியின் சிறப்பு யூட்டியுப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளின் வீடியோக்களை அந்த தளத்திற்கு சென்ற பார்காமல் வாட்ஸ்அப் சாட்க்கு உள்ளேயே ஒடவிட்டு பார்க்க முடியும்.

இதன் மூலம் யூட்டியுபில் நாம் கண்ட வீடியோவை நம் நண்பருக்கு வாட்ஸ்அப்பில் ஷேர் செய்தால் அவர் யூடியுப் சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அங்கேயே பார்த்திவிடலாம். ஆனால் அந்த சாட்பாக்ஸை விட்டு வெளியே வந்தால் சேவை செயல் நின்றுவிடும்.

இது தற்போது வர்சன் 2.18.301 மட்டும் பீட்டா வர்சனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் எல்லா போன்களுக்கும் எல்ல வர்சன்களுக்கும் வரும் என நம்பலாம். இதை பயன்படுத்திப்பார்க்க விரும்பினால் உங்கள் ஆப்பை அப்டேட் செய்து பாருங்கள் இல்லை என்றால் பேக்கப் செய்துவிட்டு அன் இன்ஸ்டால் செய்து ரீ இன்ஸ்டால் செய்து பாருங்கள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்