18 வயதில் வேலை தேடி வந்த நபர் 58 வயதில் சிறையிலிருந்து மீட்பு…..!!

பிரித்தானியாவில் 40 ஆண்டுகளாக ஷெட் போன்ற ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.Cumbria  கவுண்டியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.நபர் ஒருவர் கடந்த 1978-ல் தனது 18-வது வயதில் வேலை தேடி அங்கு வந்துள்ளார்.அப்போது சம்பளம் தரப்படாத அடிமையாக அவர் வேலையில் அமர்த்தப்பட்டு கொடுமைகளை அனுபவித்துள்ளார்.

இப்படி அந்த ஷெட்டில் அவர் 40 ஆண்டுகள் இருந்த நிலையில் அதிகாரிகளின் சோதனையின் போது சமீபத்தில் 58வது வயதில் மீட்கப்பட்டுள்ளார்.அவரை மீட்ட அதிகாரி கூறுகையில், சிறிய வெளிச்சத்தில் அந்த ஷெட்டில் மீட்கப்பட்ட நபர் நாங்கள் அவர் அருகில் சென்றபோது மிகவும் பயந்து போய் இருந்தார்.

உடனடியாக மீட்கப்படவேண்டிய நிலையில் பலவீனமாக இருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.அவர் இருந்த ஷெட்டில் போர்வையும் சிறிய சேரும் இருந்தது. அறை முழுவதும் குளிர்ச்சியாக இருந்தது மனிதர்கள் அங்குவாழவே முடியாதபடி இருந்தது.இது சம்மந்தமாக 79 வயது முதியவரை கைது செய்துள்ளோம்.

இந்த 40 வருடத்தில் அடிமையாக இருந்த நபர் அங்கிருந்து தப்பிக்க முயன்றாரா என்ற விபரம் தெரியவில்லை என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்