ஐபோன் பிரியையான மகளுக்கு ஐபோன் கல்லறை அமைத்த பாசக்கார அப்பா!!

இறந்துபோன ஐ-போன் பிரியையான தன்னுடைய மகளுக்கு ஐ-போன் வடிவிலேயே கல்லறை அமைத்துள் நெகிழச் செய்துள்ளார் தந்தையொருவர். இந்தச் சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.ரஷ்யாவை சேர்ந்த ரிதா சமீவா என்ற 25 வயதான இளம்பெண் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் உயிர்நீத்தார். ரிதா சமீவா அதிகமாக கைத்தொலைபேசியை பயன்படுத்திக் கொண்டு இருப்பவர். அவருக்கு ஐ-போன் கைத்தொலைபேசிகள் மிகவும் பிடித்தமாக இருந்தது.இந்நிலையில் மகள் இறந்து இரண்டு வருடங்களுக்கு பின்னர், அவருடைய தந்தை ரெய்ஸ் சாமீவ் ஐ-போன் வடிவிலான ஒரு தோற்றத்தை வடிவமைத்து அவரது கல்லறையில் வைத்தார்.

மிகவும் வித்தியாசமாக இருக்கும் இந்தக் கல்லறையைப் பார்க்க பொதுமக்கள் பலரும் குவிகின்றனர். கருகல்லில் ஐபோனை மாதிரி தயாரிக்கப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர் தெரிவித்தார்.

“அந்த வடிவமைப்பு பலருக்கும் பிடித்து போனதால் தற்போது ஏராளமானோர் வித்தியாசமாக நிறைய ஓர்டர்களை கொடுக்கின்றனர். எங்களுக்கு மிகவும் வியப்பாக உள்ளது“ என வடிவமைத்தவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்