உடல் எடையை இரு மடங்காக மாற்றும் உணவு வகைகள் இதுவே…! தவிர்த்துவிடுங்கள்

நாம் செய்யும் ஒரு சில செயல்கள் நம் உடல் நலத்தை கெடுக்க கூடியதாகும். அது மிக சிறிய தவறாக கூட இருக்கலாம். குறிப்பாக உணவு பழக்கத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உணவின் மேல் உள்ள காதலால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு, பிறகு இதனால் உடல் எடை கூடி அவதிப்படுவோர் அதிகம். இந்த பிரச்சினை நம்மில் முக்கால் வாசி பேருக்கு இருக்கத்தானே செய்கிறது.

அதன் பின் உடல் எடையை குறைக்க பலவித வழிகளை நாம் செய்வோம். இதில் நாம் செய்யும் ஒரு சில முக்கிய தவறுகளே நம் எடையை குறைக்க விடாமல் தடுக்கும். இந்த பதிவில் எடை குறைப்பை தடுக்க கூடிய 12 உணவுகளை பற்றி அறிந்து கொண்டு தவிர்ப்போம் நண்பர்களே.

உணவும் எடையும்… உடல் பருமன் கூடியவர்கள் பல்வேறு முறையில் எடையை குறைக்க வேண்டும் என எண்ணுவார்கள். அதே வேகத்தில் அவர்கள் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருப்பர். குறிப்பாக முழு கொழுப்புள்ள அன்றாட உணவுகள், கரையாத கொழுப்புகள் கொண்ட உணவுகள், கெட்ட கொலெஸ்ட்ரோல் உள்ள உணவு பொருட்கள் போன்றவற்றை சொல்லலாம்

வெள்ளை பிரட் எடையை குறைக்க நீங்கள் அதிக உழைப்பை போடும்போது, அதனை முற்றிலுமாக தடுத்து விடுகிறது இந்த வெள்ளை பிரட். ஏனெனில் இதில் ஏராளமான அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டு, மிகவும் சுத்திகரிக்கப்படுகிறது. எனவே, இதனால் உடல் எடை கூடுமே தவிர குறையாது.

பழ சாறுகள் இப்போதெல்லாம் நம் வீடுகளில் தயார் செய்யப்படும் எந்தவித உணவையும் அவ்வளவாக ரசிப்பதில்லை. மாறாக தெரு கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டிலும் விற்கும் பொருளுக்கே தலை அசைகிறோம். அந்த வகையில் பழ சாறுகளை அடங்கும். நாம் கடைகளில் வாங்கும் பழ சாறுகளில் செயற்கை முறையில் இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுகிறது. எனவே, இது எடை குறைப்பை தடுக்க கூடியதாம்

காஃபி காபியில் காஃபின் என்றே மூல பொருள் உள்ளது. அதிக கலோரிகள் கொண்ட காபியை குடித்து வந்தால் உடலின் எடை குறையாது. இப்போதெல்லாம் காபியில் பதப்படுத்தப்பட்ட பாலையே நாம் பயன்படுத்துகிறோம். இதனால், கொழுப்புகள் கூடி உடல் பருமன் மீண்டும் உயரும்.

சோயா சாஸ் சோயா சாஸில் குறைந்த அளவே கலோரிகள் இருந்தாலும் இதில் அதிகமான சோடியம் இருக்கிறது. எனவே, மன அழுத்தத்தை இது உயர்த்த கூடும். இதனால், உடல் எடை குறைக்கும் முயற்சி தோல்வியில் முடிய கூடும். குறைந்த அளவில் சோடியம் உள்ள உணவுகளை உண்ணுவது உகந்தது.

ஆடை நீக்கப்படாத பால் பாலில் நிறைய ஊட்டசத்துக்கள் இருந்தாலும் அவற்றின் தன்மையை பொறுத்தே குடிக்கலாமா..? கூடாதா..? என்பதை தீர்மானிக்க முடியும். ஆடை நீக்கப்படாத பாலில் அதிக அளவில் கொழுப்புகள் மற்றும் கொலெஸ்ட்ரோல்கள் இருக்கும். எனவே, ஆடை நீக்கப்பட்ட பாலை பருகுவது நல்லது.

பழங்கள் ஒரு சில பழங்கள் அதிக அளவில் சர்க்கரையை கொண்டிருக்கும். அவற்றை தவறுதலாக சாப்பிட்டால் கூட உங்களின் டயட் பாழாகி விடும். குறிப்பாக வெப்பமண்டல பழங்களான மாம்பழம் மற்றும் அண்ணாச்சி பழத்தை தவிர்ப்பது நன்று. ஏனெனில் இதில் சர்க்கரையின் அளவு அதிகமாம்.

அதிக நார்சத்து அதிக நார்சத்து கொண்ட உணவுகளை உண்பது எடை குறைப்புக்கு ஏற்றது அல்ல. முக்கியமாக நீங்கள் உண்ணும் அதிக அளவிலான ஸ்னாக்ஸ்கள் பசியின்மையை ஏற்படுத்தி விடும். எனவே, இவை எடை குறைப்புக்கு ஒரு தடையாக இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வெறும் சாலட்ஸ் வெறும் கீரை மற்றும் சில பச்சை காய்கறிகளை கொண்ட சாலட்ஸ் உடலுக்கு ஆரோக்கியத்தை தராது. உடல் எடையை குறைக்க விரும்புவோர் பழுப்பு அரிசி அல்லது சக்கரை வள்ளி கிழங்கு போன்றவற்றை சாலட்டுடன் சேர்த்து கொள்வது நல்லது.

பிரெஞ்சு பிரைஸ் உருளை கிழங்கில் தயாரித்த இந்தத் உணவாக இருந்தாலும் நமக்கு மிகவும் பிடிக்கும். இதன் ருசி நம்மை கட்டி போட்டு விடும். அதனாலையே இதை அதிக அளவில் நாம் சாப்பிட்டு விடுவோம். உடல் எடையை கூடாமல் இருக்க, கட்டாயம் இதனை தவிர்க்க வேண்டும்

குறைந்த கலோரி உணவுகள் நீங்கள் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக குறைந்த கலோரிகள் உள்ள உணவுகளை சாப்பிடுவது வழக்கம். ஆனால், இவை உங்கள் மனதில் குறைந்த அளவில் உணவை சாப்பிட்டு விட்டோம் என்ற மாயை ஏற்படுத்தி விடும். உண்மை என்னவென்றால், குறைந்த அளவு கலோரிகள் கொண்ட உணவுகளை தயாரிக்கும் போது பல வித வேதி பொருட்கள் சேர்த்திருப்பார்களாம்.

மைக்ரோவேவ் பாப்கார்ன் பாப்கார்ன் எல்லோருக்கும் பிடித்தமான உணவுதான், என்றாலும் இதிலும் ஆப்பு இருக்கிறது. மைக்ரோவேவ் மூலம் தயாரித்த பாப்கார்ன், அதிக வேதி தன்மை நிறைந்தது என ஆராய்ச்சிகள் சொல்கிறது. எனவே, இவை உடல் எடையை அதிகரிக்க செய்து விடும்.

மது பானம் மது பானங்களில் குறிப்பாக பீர் உங்கள் எடையை குறைக்க தடையாக இருக்கும். இவை உடல் எடையை கூட செய்யுமே தவிர குறைக்க வழி விடாதாம். பீரை குடித்து வந்தால் தொப்பை போடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்

எனவே, மேற் சொன்ன உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள் நண்பர்களே…! மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்