மசாஜ் நிலையத்திற்குச் சென்ற தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வென்னப்புவ – வைக்கால் பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையத்திற்குச் சென்ற தொழிலதிபரின் 95 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை பெண்ணொருவர் திருடியுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வென்னப்புவ பிரதேசத்தில் வியாபாரம் செய்யும் மாதம்பே, ஹரிந்தாகம பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் சங்கிலியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக குறித்த நபர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். மசாஜ் செய்த போது மசாஜ் செய்யும் பெண்ணைத் தவிர வேறு ஒருவரும் இல்லை என அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்