வீட்டில் பிணமாக தொங்கிய இளம் பெண்…!! குழந்தையை தவிக்க விட்டு தப்பியோடிய கணவன்….!!

சென்னை பெரும்பாக்கத்தில் இளம்பெண் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.ஆந்திராவைச் சேர்ந்தவர் சுரேஷ் (29) மென்பொறியாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி பார்கவி (எ) ரோகினி (25) என்ற மனைவியும் 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் பெரும்பாக்கத்தில் தனி வீட்டில் வசித்து வருகின்றனர்.

இருவருக்கும் குடும்ப உறவு சந்தோஷமாக சென்றுக்கொண்டிருந்த நிலையில் சுரேஷ் வரதட்சணை கேட்டு ரோகினியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வீட்டில் ரோகினி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் கணவர் சுரேஷை தொடர்புக்கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரை காணவில்லை. கணவன் சுரேஷ் தலைமறைவாகி இருக்கலாம் என போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.

ரோகினி வழக்கை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்துள்ள பள்ளிக்கரணை போலீசார், சுரேஷை தேடி வருகின்றனர்.வரதட்சணை கேட்டு ரோகினியை, சுரேஷ் சித்ரவதை செய்து வந்ததாக குற்றம் சாட்டியுள்ள பெண்ணின் உறவினர்கள், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்