திருமண வீட்டிற்கு சென்று திரும்பிய வாகனம் கோர விபத்து……!! 7 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்…….

ஹாலிஎல – பதுளை பிரதான வீதியின் போகஹமலித்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பெண்கள் அடங்களாக 7 பேர் காயமடைந்துள்ளனர்.நேற்று மாலை ​6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.ஹாலிஎலயில் இருந்து பதுளை நோக்கி சென்றுக்கொண்டிருந்த வேன் வாகனமொன்று குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர்கள் திருமண வைபவமொன்றுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக குறித்த வாகனம் குடைசாய்ந்துள்ளதாக காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதேவேளை , குறித்த விபத்து தொடர்பில் செய்திச் சேகரிக்க சென்ற செய்தியாளர் ஒருவருக்கு அங்கிருந்த நபரொருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.குறித்த நபர் ஹெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த திருமண நிகழ்வுக்கு சென்று வேறொரு வாகனத்தில் வந்தவர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில்செய்தியாளர் ஹாலிஎல காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.இதேவேளை , குறித்த விபத்து வீதியின் அருகில் அமைந்துள்ள விற்பனையகமொன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்