இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (இன்றைய ராசி பலன்…14.09.2018)

14-09-2018 வெள்ளிக்கிழமை இன்றைய ராசி பலன்கள். 

விளம்பி வருடம், ஆவணி மாதம் 29ம் திகதி, மொகரம் 3ம் திகதி, 14-09-2018 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி மாலை 6:36 வரை; அதன் பின் சஷ்டி திதி, விசாகம் நட்சத்திரம் நாளை காலை 6:01 வரை; அதன் பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

• பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அசுவினி
பொது : மகாலட்சுமி வழிபாடு.மேஷம்:

சமயோசிதமாக செயல்பட்டு முன்னேறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. லாபம் அதிகரிக்கும். உறவினர் மத்தியில் அன்பும், பாசமும் வளரும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும்.

ரிஷபம்:
சமூகத்தில் மதிப்பு உயரும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் உயரும். பணியாளர்கள் பணியிலக்கை விரைந்து முடிப்பர். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

மிதுனம்:
நண்பரின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத்தை பாதுகாக்கவும். லாபம் சுமார். பெண்கள் சிக்கனமாக செலவு செய்வது நல்லது. உணவுக் கட்டுப்பாடு உடல்நலனைப் பாதுகாக்கும்.

கடகம்:
திட்டமிட்ட பணியில் திடீர் மாற்றம் ஏற்டலாம். தொழில், வியாபாரம் சார்ந்த குறையை பிறரிடம் சொல்ல வேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சமாளிக்க முடியாமல் திணறுவர்.

சிம்மம்:
பெரியவர்களின் வழிகாட்டுதலை மதித்து செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் கூடுதல் வளர்ச்சி பெறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். விருந்து, விழாவில் குடும்பத்துடன் பங்கேற்பீர்கள். பணியாளர்களுக்கு நிர்வாகத்தினரின் பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.

கன்னி:
அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் சார்ந்த குறைகளை உடனுக்குடன் சரிசெய்வது நல்லது. சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். பிள்ளைகளின் நற்செயலை ஊக்கப்படுத்துவீர்கள்.

துலாம்:
அன்பால் பிறரை அரவணைப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். ஆதாயம் உயரும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

விருச்சிகம்:
செயலின் விளைவை உணர்ந்து நடப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் .சராசரி பணவரவு கிடைக்கும். உறவினர் வகையில் செலவு செய்ய நேரிடலாம். பிள்ளைகளால் உதவி உண்டு.

தனுசு:
சமூகத்தில் உயரிய அந்தஸ்து கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிக்கும். லாபம் பெருகும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.

மகரம்:
மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். அதிக உழைப்பினால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவை குறைவின்றி நிறைவேறும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

கும்பம்:
தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். அதிக நிபந்தனைகளுடன் பணக்கடன் பெற வேண்டாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.

மீனம்:
பேச்சு, செயலில் குளறுபடி ஏற்படலாம். தொடர்பில்லாத பணியை ஏற்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் திடீர் செலவுக்கு பயன்படும். அரசியல்வாதிகள் சமரசப்பேச்சில் நிதானம் பின்பற்றவும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்