நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெரும் திருவிழா கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவு…..!!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடைந்தது.கடந்த 16ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பித்த மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெற்று நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை தீர்த்த திருவிழா நடைபெற்று கொடியிறக்கம் நடைபெற்றது.

குறித்த மகோற்சவ திருவிழாக்களை கண்டுகளிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

இதேவேளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும், கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருகப்பெருமானை வழிபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆலயத்தில் விசேட பூஜைகள் பல நடத்தப்பட்டு நேற்று மாலை கொடியிறக்கம் இனிதே நிறைவடைந்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்