இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்….(10.09.2018)

10-09-2018 திங்கட்கிழமை இன்றைய ராசி பலன்கள்.

விளம்பி வருடம், ஆவணி மாதம் 25ம் திகதி, துல்ஹஜ் 29ம் திகதி, 10-09-2018 திங்கட்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி இரவு 10:16 வரை;

அதன் பின் துவிதியை திதி, பூரம் நட்சத்திரம் காலை 7:21 வரை; அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30-9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : சதயம்
பொது : சூரியன் வழிபாடு.மேஷம்:
வெற்றி நோக்கில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலம் உண்டாகும். ஆதாயம் அதிகரிக்கும்.பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

ரிஷபம்:
பிறர் சொல்லும் அவதுாறு பேச்சை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது.பெண்கள் அதிக பயன்தராத பொருள் வாங்குவதை தவிர்க்கவும். தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

மிதுனம்:
பேச்சு, செயலில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறு சரி செய்வதால் வளர்ச்சி சீராகும்.மிதமான லாபம் கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும்.

கடகம்:
கருணை நிறைந்த மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். பணவரவு அதிகரிக்கும்.குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர்.

சிம்மம்:
உங்கள் மீது சிலர் பொறாமை கொள்வர். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. லாபம் சுமாராக இருக்கும்.பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்பட நேரிடலாம். உறவினர் வகையில் உதவி கிடைக்க வாய்ப்புண்டு.

கன்னி:
நண்பரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவால் வளர்ச்சி பெறும்.தாயின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வெகுநாள் எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.

துலாம்:
உறவினரிடம் பேச நினைத்த விஷயம் மாறி போகலாம். தொழில்,வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகும்.திடீர் செலவால் சேமிப்பு கரையும். பணியாளர்கள் விழிப்புடன் பணிபுரிவது அவசியம். மாணவர்கள் சாகச விளையாட்டுக்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்:
கடந்த கால உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் கூடுதல் உழைப்பால் சீராகும். முதலீட்டை அதிகப்படுத்த கடன் பெறுவீர்கள்.பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். மாணவர்களுக்கு படிப்பில் தேர்ச்சி விகிதம் கூடும்.

தனுசு:
எதிர்மறையாக இருந்த சூழ்நிலை மறையும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற தகுந்த பணிகளில் ஈடுபடுவீர்கள்.லாபம் உயரும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் உண்டு.

மகரம்:
உங்கள் மனதில் சோர்வு ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும்.பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். மனைவியின் ஆறுதல் வார்த்தை நிம்மதி தரும்.

கும்பம்:
பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் குளறுபடி சரிசெய்ய புதிய அணுகுமுறை தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும்.பெண்கள் அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.

மீனம்:
நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்திட கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும்.பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்