தமது குழந்தைகளுக்காக தந்தை செய்த திகில் செயல்…!! பிரித்தானியாவில் நடந்த திகில் அதிர்ச்சி சம்பவம்…!!

பிரித்தானியாவில் சுரங்க ரயில் பாதை ஒன்றில் தவறி விழுந்த குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தந்தை ரயில் பாலத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.Baker Street சுரங்க ரயில் பாதையின் அருகே தனது குழந்தையை தள்ளு வண்டி ஒன்றில் வைத்துக் கொண்டு சென்ற ஒரு பெண் விளையாட்டாக அதை தள்ளுவது போல் செய்ய, எதிர்பாராத விதமாக அந்த தள்ளு வண்டியுடன் அவர்கள் இருவரும் ரயில் பாதையில் விழுந்தனர்.

அதைக்கண்டு திடுக்கிட்ட அந்த குழந்தையின் தந்தையும் அவர்களைக் காப்பாற்றுவதற்காக ரயில் பாதையில் குதித்தார்.ஆனால், அவர்களை நோக்கி ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. சட்டென்று ரயில் பாதையில் இருந்த ஒரு குழிக்குள் அவர்கள் படுத்துக் கொண்டனர். ரயில் அவர்கள் தலை மீது கடந்து சென்றது.

மக்கள் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, ரயில் கடந்து சென்றதும் அவர்கள் எந்த பாதிப்புமின்றி எழுந்து வந்ததைக் கண்டு மக்கள் நிம்மதிப் பெரு மூச்சு விட்டனர்.அவர்களுக்கு காயம் ஏற்படாவிட்டாலும் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்