வந்துவிட்டது குருப்பெயர்ச்சி—கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டப் போகும் அதிஷ்டம்… இவர்களுக்குத் தானாம்……!!

துலாம் ராசி நேயர்களே

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.தங்களது ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 2 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 6 ஆம் இடம் 8 ஆம் இடம் மற்றும் 1௦ ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 6 ஆம் இடம் ரோகத்தையும் சத்ருக்களையும் குறிக்கும்.8 ஆம் இடம் இடையூறுகள் மற்றும் சிரமங்களையும் 1௦ ஆம் இடம் தொழிலையும் கவுரவத்தையும் குறிக்கும்.

தொழிலும் வியாபாரமும்

தொழிலில் முன்னுயர்வு உண்டு. மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். வியாபார நடவடிக்கைகள் ஆதரவு அளிக்கும் வகையில் இருக்கும். புதிய திட்டங்கள், புதிய முதலீடுகள் ஆகியவற்றிற்கு இடமுண்டு.

குடும்பம்

குடும்ப சூழல் திருப்தி அளிக்கும். குடும்பப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.குடும்ப நபர்களுக்கு தங்களால் ஆலோசனைகளை வழங்க முடியும். அவர்களும் கேட்கும் நிலயில் இருப்பர்.குழந்தைகளால் சந்தோஷம் உண்டு.

கல்வி
மேற்படிப்பிற்கான பிரயாணங்கள் உண்டு.கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். பிரயத்தனங்களுக்கு நற்பலன் உண்டு.

காதலும் திருமணமும்

உறவில் பரஸ்பர அன்பு உண்டு. திருமண பந்தங்கள் வலுக்கும். கேளிக்கைகளுக்கு இடமுண்டு. தகவல் பரிமாற்றத்தால் பிறரின் அன்பினைப் பெற முடியும்.

துலாம் ராசி – ஆரோக்கியம்

நீண்ட நாட்களாக இருந்து வந்த உபாதைகளிலிருந்து விடுதலை உண்டு. எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் தன்மையால் ஆரோக்கியம் கெடாது. பழ வகைகள் அதிகம் சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை வளர்க்கவும்.

மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:

வருமான உயர்வு

உடல் உபாதைகளிலிருந்து நிவாரணம்

புதிய முதலீடுகள்

உறவுகளில் அனுசரணை

பரிகாரம்
ஓம் நமோ வாசஸ்பதியே என 108 முறை ஜெபிக்கவும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்