சரித்திரப் பிரசித்தி பெற்ற நல்லைக்கந்தனின் திருக்கையாலாய வாகனத் திருவிழா…..!!(புகைப்படங்கள் இணைப்பு)

வரலாற்றுப் புகழ்பெற்ற நல்லூர் மகோற்சவ திருவிழாவின் திருக்கைலாய உற்சவம் நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.மகோற்சவத்தின் 20ஆம் திருவிழாவான நேற்று (செவ்வாய்க்கிழமை) வேல் பெருமான், வள்ளி, தெய்வானை சமேதரராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

மாலை 5 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் உள்வீதியுலா வந்து மாலை 6 மணிக்கு திருக்கைலாய வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். நேற்றைய திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருட்காட்சியை கண்டுகளித்தனர். கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு, தினமும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.இத்திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருள்பெற்றுச் செல்கின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்