தொடரை இழந்தாலும் ஐ.சி.சி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் கோஹ்லி…!!

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்திருந்தாலும் அணியின் தலைவர் விராட் கோஹ்லி ஐ.சி.சி. தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.சவுதம்ப்டன் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் இங்கிலாந்து அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியிருந்தது

இதில் இந்திய அணி சார்பில் இரு இன்னிங்சிலும் 46 மற்றும் 58 ஓட்டங்களை விராட் கோஹ்லி பெற்றுக்கொண்டார். இதன் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலாவது இடத்தில், இருந்த அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் சிமித்தை பின் தள்ளி முதலாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதில் 937 புள்ளிகளுடன் விராட் முதலிடத்திலும், 929 புள்ளிகளுடன் சிமித் 2 ஆம் வைத்து இடத்திலும், நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் 3 ஆவது இடத்திலும் உள்ளனர்.

மேலும், டேவிட் வோர்னர், ஜோய் ரூட், புஜாரா, கருணாரத்ன, சந்திமால் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்