இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்….(04.09.2018)

04-09-2018 செவ்வாய்க்கிழமை இன்றைய ராசி பலன்கள்.

விளம்பி வருடம், ஆவணி மாதம் 19ம் திகதி, துல்ஹஜ் 23ம் திகதி, தேய்பிறை, நவமி திதி மதியம் 2:00 வரை; அதன் பின் தசமி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் மாலை 4:28 வரை; அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், சித்த, மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை
பொது : துர்க்கை, முருகன் வழிபாடு.

மேஷம்:

மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபார தொடர்பு பலம் பெறும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப தேவை குறைவின்றி நிறைவேறும். உடல்நிலை திருப்தியளிக்கும். பெண்கள் கணவரின் அன்பு மழையில் நனைவர்.

ரிஷபம்:

சிலரது பேச்சு உங்கள் மனதை சங்கடப்படுத்தும். தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். வெளியூர் பயணத்திட்டத்தில் திடீர் மாறுதல் உண்டாகும்.

மிதுனம்:

மனதில் அன்பும், கருணையும் நிறைந்திருக்கும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். லாபம் உயரும். பணியாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் உண்டு. வெகுநாள் காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கைவந்து சேரும்.

கடகம்:

குடும்பத்தினரின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். தொழில், வியாபார இலக்கு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். வருமானம் சுமாராக இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பிற்காக கூடுதல் நேரம் ஒதுக்கவும்.

சிம்மம்:

அக்கம் பக்கத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். தாராள பணவரவால் சேமிப்பு கூடும்.

நண்பருடன் விருந்து விழாவில் பங்கேற்பீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

கன்னி:

நண்பரின் உதவியால் மனம் நெகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். லாபம் உயரும்.

கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு மகிழ்வர். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் ஏற்படும்.

துலாம்:

வீணாக பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சீராக இருக்கும். உடல்நலனில் கவனம் தேவை.

பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.

விருச்சிகம்:

பேச்சில் குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் கவனம் தேவை. பெண்கள் சிக்கனமாக செலவு செய்வது நல்லது.

உடல்நலத்திற்காக மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.

தனுசு:

எதிர்பார்த்த நன்மை எளிதாக கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள்.

நிலுவைப் பணம் வசூலாகும்.உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

மகரம்:

நண்பரின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். லாபம் உயரும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.மனைவி வழி சார்ந்த உறவினர்களுக்கு உதவுவீர்கள்.

கும்பம்:

எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். வீட்டுச் செலவால் சேமிப்பு கரையும். ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.

மீனம்:

சூழ்நிலைகளை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். எதிர்பாராத வகையில் திடீர் செலவு உண்டாகும். நண்பரின் ஆறுதல் பேச்சு நம்பிக்கையை ஏற்படுத்தும். தெய்வ வழிபாடு நன்மையளிக்கும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்