வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லைக்கந்தன் ஆலய வருடாந்த பெரும் திருவிழா… 16 ஆம் நாள்…..(புகைப்படங்கள் இணைப்பு)

வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தில் 16ஆவது நாள் திருவிழா, அடியார்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற திருவிழாவில் முருகப்பெருமான் சிம்ம வாகனத்திலும் வள்ளி, தெய்வானை மகர வாகனங்களிலும் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.எம்பெருமான் சிம்ம வாகனத்தில் கம்பீரமாய் எழுந்தருளிய கண்கொள்ளாக் காட்சியைக் காண பெருந்திரளான பக்தர்கள் குவிந்திருந்ததோடு, பக்திப் பரவசத்தோடு அரோஹரா நாமத்தை உச்சரித்தவாறு அருள் பெற்றுச் சென்றனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அன்றைய தினம் முதல் தினமும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்