சரித்திரப் பிரசித்தி பெற்ற நல்லைக்கந்தன் ஆலய வருடாந்த பெரும் திருவிழா-15 ஆம் நாள் (புகைப்படங்கள் இணைப்பு)

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் 15ஆவது நாள் திருவிழா, அடியார்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது.நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற திருவிழாவில் முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை ஆகியோர் ஆட்டுக்கடா வாகனங்களில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். எம்பெருமான் ஆடுக்கடா வாகனத்தில் எழுந்தருளிய கண்கொள்ளாக்காட்சியைக் காண பெருந்திரளான பக்தர்கள் குவிந்திருந்ததோடு, பக்திப் பரவசத்தோடு அரோஹரா நாமத்தை உச்சரித்தவாறு அந்த அருட்காட்சியை தரிசித்தனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அன்றைய தினம் முதல் தினமும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்