வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தன் ஆலய வருடாந்த பெரும் திருவிழா 14 ஆம் நாள்-(புகைப்படங்கள் இணைப்பு)

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் 14ஆவது நாள் திருவிழா, பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ மிகச் சிறப்பாக இடம்பெற்றது.நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இத்திருவிழாவில் முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை ஆகியோர் ஐந்து தலை நாக வாகனங்களில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஐந்து தலை நாக வாகனத்தில் எழுந்தருளிய கண்கொள்ளா காட்சியைக் காண பெருமளவான பக்தர்கள் குவிந்திருந்ததோடு, பக்திப் பரவசத்தோடு அரோஹரா நாமத்தை உச்சரித்தவாறு அந்த அருட்காட்சியை தரிசித்தனர். கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெரும் திருவிழாவை முன்னிட்டு, தினமும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்