இந்தோனேஷியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்தது இலங்கை ஹொக்கி அணி….!

ஆசிய விளையாட்டு விழாவில் இந்தோனேசிய ஹொக்கி அணியை வீழ்த்திய, இலங்கை ஹொக்கி அணி வெற்றி பெற்றுள்ளது.இலங்கை அணி கடந்த போட்டியிலும் ஹொங் கொங் அணியை வென்றதன் மூலம், இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற உற்சாகத்தில் களமிறங்கியது.தமது சொந்த மண்ணில் விளையாடும் இந்தோனேஷிய அணியானது தமது முதல் போட்டியில் ஜப்பான் அணிக்கு சவால் கொடுத்து 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

எனினும், ஜப்பான் அணியுடன் 11-0 என தோல்வியுற்றதால், இலங்கை அணிக்கு இந்த போட்டி இலகுவாக அமையாது என முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்க்கப்பட்டது போலவே இரண்டு அணிகளும் ஆரம்பம் முதலே கடுமையான போட்டியை வெளிப்படுத்தின. சொந்த மண்ணில் விளையாடும் இந்தோனேஷிய அணியானது, தனது ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் போட்டியில் இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுத்து வந்தது.

எனினும், இலங்கை அணி வீரர் சந்தருவன் ப்ரியலங்க 24ஆவது நிமிடத்தில் இலங்கை அணிக்கு முதல் கோலை அடித்து அணியை முன்னிலைக்கு அழைத்துச் சென்றார்.ஆட்டத்தின் 38ஆம் நிமிடத்தில் இந்தோனேசிய அணி பெனால்டி கோர்ணர் மூலமாக கோல் அடித்து போட்டியை சமநிலை செய்தது.

42ஆம் நிமிடத்தில் இசங்க குமார மூலமாக இரண்டாவது கோல் அடித்து மீண்டும் போட்டியில் முன்னிலையை பெற்றது இலங்கை அணி. 54ஆவது நிமிடத்தில் இசங்க குமார தனது இரண்டாவது கோலை அடித்து இலங்கை அணியை மேலும் முன்னிலைக்கு அழைத்து சென்றார்.இதன்மூலம் 3-1 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளது.

கடந்த 1966ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவின் பின்னர், இலங்கை ஹொக்கி அணி முதல் முறை ஆசிய விளையாட்டு விழாவில் இரண்டு போட்டிகளை வென்று சாதனை படைத்துள்ளது.

இதேவேளை, இலங்கை அணி இன்று செவ்வாய்கிழமை) இந்திய அணியை சந்திக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்