பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் திருத்தேர் ஏறி பக்தர்களுக்கு அருள் பாலித்த செல்வச் சந்நிதி முருகன்…!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது.வழமைபோல பல்லாயிரக்கணக்கான அடியார்கள் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டு தமது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.

கடந்த 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய செல்வச்சந்நிதி ஆலயத்தின் மகோற்சவத்தை முன்னிட்டு, தொடர்ச்சியாக விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன. இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து செல்வச் சந்நிதியான், பிள்ளையார் மற்றும் வேல் தாங்கிய மூன்று இரதங்கள் வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்துள்ளன. இதன்போது பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து, வேல் பூட்டி, காவடி தூக்கி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.தேர்த் திருவிழாவில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதோடு, புலம்பெயர் தேசங்களிலிருந்து வருகைதந்துள்ள பக்தர்களும் கலந்துகொண்டனர்.நாளை இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் சந்நிதியான் ஆலயத்தின் மகோற்சவம் இனிதே நிறைவுறும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்