இணையத்தில் வேகமாக வைரலாகும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் புதிய காணொளி!!

பணிப்புறக்கணிப்புகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் மற்றும் அரச மருத்துவர்களை விமர்சிக்கும் வகையில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பாடல் ஒன்றை இயற்றி பாடியுள்ளார்.இந்த பாடல் தற்போது இணையத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.“ஏழைகள் எமக்காக யார் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போகின்றனர்? வறிய எமக்காக உண்மையான, நேர்மையான பணிப்புறக்கணிப்பை யார் செய்யப் போகிறார்கள்?

மருந்து எடுக்க மருத்துவமனை செல்லும் போது, மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில், நோயாளிகளுக்கு அச்சுறுத்தல்.ஆனால், வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு சிறந்த பாடசாலை, ஆடம்பர வாகனம் கோரி ஒரு பணிப்புறக்கணிப்பு. இவை எல்லாம் எமக்கான போராட்டங்கள் இல்லை. மேட்டுக்குடியினரின் பணிப்புறக்கணிப்பு.

வேலை முடிந்து வீட்டுக்கு போக ரயில் நிலையம் சென்ற நேரத்தில் ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்.

அவர்கள் சம்பளத்தை அதிகரிக்குமாறும், உயர் பதவிகளை கோரியும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்” என்ற பொருள் தரும் வகையில் ரஞ்சன் ராமாநாயக்க இந்த பாடலை இயற்றி பாடியுள்ளார். பாடலுக்கு எச்.எம். ஜயவர்தன இசையமைத்துள்ளார்.

காணொளியைப் பார்வையிட இங்கே அழுத்தவும்…

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்