ரி- ரிருவென்ரி போட்டிகளிலிருந்து ஜுலன் கோஸ்வாமி திடீர் ஓய்வு! பெரும் சோகத்தில் ரசிகர்கள்….!!

கிரிக்கெட் விளையாட்டில் நாங்களும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை உலகிற்கு அறியத்தந்ததில், இந்திய மகளிர் அணிக்கு மிக முக்கிய பங்கு உள்ளது என்றால் அது மிகையாகாது.ஏனென்றால், இந்தியா மகளிர் அணியினரின் சம்பியன் பட்டங்கள், கடந்த கால பெறுபேறுகள் மற்றும் தன வீராங்கனைகளின் சாதனைகள் இதற்கு சான்று.இது இவ்வாறிருக்க இந்திய மகளிர் அணிக்கு பல வெற்றிகளுக்கு துணை நின்றவரும், பல சாதனைகளுக்கு சொந்தக் காரருமான அணியின் முன்னணி வீராங்கனையொருவர் ரி-20 போட்டியிலிருந்து ஓய்வு பெறப்பேவதாக அறிவித்துள்ளார்.

இந்திய மகளிர் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜுலன் கோஸ்வாமி, தான் அந்த வீராங்கனை….

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற மகத்தான சிறப்புக்குரிய ஜுலன் கோஸ்வாமி, தனது ஓய்வை அறிவித்திருப்பது இரசிகர்களுக்கு சற்று வருத்தத்தையும் அளித்துள்ளது.35 வயதாகும் ஜுலன் கோஸ்வாமி, கடந்த 2002ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை அவர் செய்த சாதனைகள் ஏராளம்.

இந்திய அணிக்காக ஜுலன் கோஸ்வாமி, 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 169 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 203 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதவிர 68 ரி- ரிருவென்ரி போட்டிகளில் விளையாடி 56 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்