தெல்லிப்பழை துர்க்காதேவிக்கு இன்று சப்பறத் திருவிழா!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் சப்பறத் திருவிழா இன்று புதன்கிழமை( 22) பிற்பகல்-04 மணிக்குச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.இவ்வாலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா கடந்த-13 ஆம் திகதி முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெற்று வருகிறது.இந்த நிலையிலேயே, இன்றைய தினம் பிற்பகல் சப்பறத் திருவிழா நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்