பேஸ்புக்கில் தொல்லை தரும் இந்த ‘அலெர்ட்’ இனி கிடையாதாம்…!!

சமூகவலைதளமான பேஸ்புக் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நமக்கு வாழ்வில் நடக்கும் நல்லது, கெட்டதுகள் முதல் நமது அப்போதைய செயல்பாடுகள் வரை அனைத்தையும் பகிர தவறுவதில்லை.பேஸ்புக்கின் பலமே சமூக மாறும்போது அதற்கேற்ப வசதிகளை மாற்றிக்கொள்வதே. ஆனால் சில சமயங்களில் அந்த அப்டேட்கள் நமக்கு எரிச்சலை தரக்கூடும்.

அந்த வகையில் பேஸ்புக்கில் புதிதாக யாராவது நம் நட்பில் இணைந்தால், பேஸ்புக்கின் மற்றொரு செயலியான மெசஞ்சரிலும், நீங்கள் அவருடன் நட்பில் இணைந்துள்ளீர்கள் என ஒரு அலெர்ட் காட்டும்.

அதாவது நீங்கள் பேஸ்புக்கில் ஒருவருடன் நட்பில் இணைந்ததன் மூலம், அவரை மெசஞ்சர் மூலம் தொடர்புகொள்ளலாம் என நமக்கு நியாபகப்படுத்தும்.அந்த அலெர்ட் பலருக்கு தேவையற்றதாக தோன்றும். சிலருக்கு அந்த அலெர்ட் எரிச்சலைத் தரும். மேலும், இந்த அலெர்ட்டுக்கு எதிராக பேஸ்புக் பயனாளர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வந்தார்கள்.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் அலெர்ட்டுக்கு எதிராக உருவாகும் எதிர்ப்புகளை கருத்தில் கொண்டு, அதனை நீக்க முடிவு செய்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்