சினிமா பாணியில் தென்னிலங்கையில் நடந்த மோதல்! பெண்ணின் துணிகரம்! ஐந்து பேர் படுகாயம்

காலியில் பிரபல வர்த்தகரின் வீட்டில் இடம்பெற்ற மோதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.இமதுவ, திக்கும்புர பிரதேசத்தில் பிரபல வர்த்தகரின் வீட்டில் திருடச் சென்றவர்களுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

பிற்பகல் 2 மணியளவில் வந்த கொள்ளையர்களுக்கும் வீட்டில் இருந்தவர்களுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் வீட்டில் இருந்த மூவரும் கொள்ளையர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிற்பகல் 2 மணியளவில் முகத்தை மூடிக்கொண்டு, கூர்மையான ஆயுதத்துடன் 4 கொள்ளையர்கள் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் இருவர் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். ஏனைய இருவர் வீட்டிற்கு வெளியே நின்றுள்ளனர்.

கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்தவுடன் வர்த்தகரின் மனைவி வீட்டிற்கு வெளியே ஓடி வந்து உதவி கோரியுள்ளார். வீட்டிற்குள் இருந்த வர்த்தகர், மகள் மற்றும் மருமகன் கொள்ளையர்களும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் அரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த மோதலில் வீட்டில் இருந்த மூவரும் படுகாமயடைந்துள்ளனர். அத்துடன் இரண்டு கொள்ளையர்களும் காயமடைந்துள்ளனர். வீட்டிற்கு வெளியே நின்று மனைவி கூச்சலிட்டமையினால் அந்த பகுதி மக்கள் வீட்டிற்கு முன்னால் கூடியமையினால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்தவர்கள் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்