யாழிலிருந்து திருமலைக்கு கஞ்சா கடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு நேர்ந்த கதி …!!

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு மூன்றரை கிலோ கேரள கஞ்சாவை கொண்டு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த மூவரையும் இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டார்.யாழ்ப்பாணம் – மருதங்கேணி, பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மனைவியின் அக்கா உள்ளிட்ட மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் திருகோணமலை சந்தியில் மூன்றரை கிலோ கேரள கஞ்சாவை வைத்துக் கொண்டு நிற்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனடிப்படையில் குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் கஞ்சாவுடன் மூவரையும் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்