கிளிநொச்சியில் பிள்ளையாருக்கு நேர்ந்த பரிதாபமும் புத்தருக்கு அடித்த யோகமும்!!

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில் பாரிய இராணுவ முகாமாக காணப்பட்டது.முன்னைய அரசின் காலத்தில் இராணுவத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட காணி யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.குறித்த காணியில் இராணுவம் இருந்த காலப்பகுதியில் அவர்களின் வழிபாட்டுக்கு புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது.பல்கலைக்கழகம் காணியை பொறுப்பேற்ற பின்னரும் அங்கு குறித்த புத்தர் சிலை காணப்பட்டு வந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக விவசாய பீடம், பொறியியல் பீடம், மற்றும் தொழிநுட்ப பீடம் என்பன ஆரம்பிக்கப்பட்டு கல்வி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழலில் புத்த கோவிலும் பராமரிக்கப்பட்டே வந்தது.இந்த நிலையில் கடந்த வருடம் அங்கிருந்த புத்தர் சிலையின் தலைப்பகுதி சிலரால் சேதமாக்கப்பட்ட நிலையில் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகம் அநுராதபுரத்தில் இருந்து புதிய புத்தர் சிலையையும், மாங்குளத்தில் இருந்து பிக்கு ஒருவரையும் அழைத்து வந்து பிரித் ஓதி மீண்டும் புத்தர் சிலையை வைத்து வழிபாட்டுக்கு ஏற்ற வகையில் எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.மேலும் புத்த கோவில் புனரமைக்கப்பட்டும் உள்ளன.

இந்த நிலையில் கடந்த வருடம் அங்கிருந்த புத்தர் சிலையின் தலைப்பகுதி சிலரால் சேதமாக்கப்பட்ட நிலையில் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகம் அநுராதபுரத்தில் இருந்து புதிய புத்தர் சிலையையும் மாங்குளத்தில் இருந்து பிக்கு ஒருவரையும் அழைத்து வந்து பிரித் ஓதி மீண்டும் புத்தர் சிலையை வைத்து வழிபாட்டுக்கு ஏற்ற வகையில் எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், புத்த கோவில் புனரமைக்கப்பட்டும் உள்ளன.பல தடைகளுக்கு மத்தியில் சில இந்து மாணவா்கள் ஒரு மரத்தின் கீழ் பிள்ளையார் சிலை ஒன்றை வைத்து சிறிய கொட்டில் ஒன்றையும் அமைத்து வழிபட ஆரம்பித்தனர்.ஒரு வருடத்தை கடந்த போதும் வழிபாட்டு உரிமை இல்லாதவர்களாகவே இருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

புத்த கோவில் இருப்பது பற்றி தங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும், பௌத்த மதத்தை பின்பற்றுகின்றவா்களுக்கு அவர்களின் வழிபாட்டுக்கு அது அவசியம் என்றும் ஆனால், அதே போன்று எங்களுக்கும் எங்களுடைய மத வழிபாட்டுக்கு நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் கோருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்