நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பாடசாலை மாணவன் கடலில் மாயம்…!! தேடும் பணிகள் முழுவீச்சில்…!! யாழில் பரபரப்பு…!!

காரைநகரில் நண்பர்களுடன் கடலுக்கு குளிக்க சென்ற தரம் 10 மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 11 மணியவில் காரைநகர் கோவளம் கடலில் நடந்துள்ளது.கடலில் நண்பர்களுடன் குளிப்பதற்கு சென்றிருந்த வேளை அவர் அலைகடலில் அகப்பட்டு காணாமல் போயுள்ளதாகவும் குறித்த மாணவனை தேடும் பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வருவதாகவும் தற்போது வரை மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லையெனவும் தெரிவிக்கப்பபடுகின்றது.

சம்பவத்தில் மாணவனுடன் குளிக்கச் சென்ற நண்பர்கள் சிலர் பாதுகாப்பாக நீந்திக்கரை சேர்ந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

 

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்