வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா இன்று

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்த சுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான அடியவர்களின் ஆரோகரா கோஷத்துடன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த முருகப் பெருமான் தேரில் ஏறி ஆரோகணித்தார்.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் குறித்த தேர்த்திருவிழா காண மாவிட்டபுரம் நோக்கி சென்றுள்ளமையை காண முடிகின்றது.கடந்த யுத்த காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஆலயங்களில் மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் முதன்மையானது என்பதுடன் தற்போது யுத்த பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல ஆலயம் மீண்டு வருகின்றமையும் புனர் நிர்மாண வேலைகள் இன்னமும் நிறைவுறாத நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்