புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவித்தார் அங்கயன் ராமநாதன்

யாழ்மாவட்டத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு தற்பொழுது அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலய திருமணமண்டபத்தில் நடைபெற்றுகொண்டிருகின்றது இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தனது சொந்த நிதியின் மூலம் ( தனது பாராளுமன்ற இரண்டு மாத சம்பளத்தின் மூலம் ) மாணவர்களுக்கான கணக்கு இலக்கங்களை சனச வங்கியில் ஆரம்பித்து அதற்கான கணக்கு புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கி வைத்தார் தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கயில்

யாழ்பாணத்தின் மூலதனம் கல்வி எமது சமூகத்தில் கல்வி அறிவு என்பது பாரம்பரியமாக எமக்கான அழிக்க முடியாத வளங்களில் ஒன்றாக இருந்து வந்ததை அனைவரும் அறிவீர்கள் அந்த வகையில் இன்று இந்த சின்னஞ்சிறு பாலகர்கள் தங்களது விடா முயற்ச்சியின் மூலமாகவும் ஆசிரியர்கள், பெற்றோர்களின் அயராத பங்களிப்புடனும் ஐந்தாம் ஆண்டில் நடைபெறுகின்ற புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்து இன்று இந்த கௌரவத்தை பெறுவது எமக்கெல்லாம் பெருமையை சேர்க்கின்ற ஒரு விடையம் இவர்கள் இன்று தங்களது முதலாவது படிக்கல்லை தாண்டி உள்ளார்கள் இவர்கள் மென்மேலும் தங்களது கல்வியில் முனேற்றம் அடைந்து பட்டங்கள் பல பெற்று பெற்றோருக்கும் இந்த மண்ணுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என இவர்களை மனமார வாழ்த்துவதோடு இவர்களை வளப் படுத்துகின்ற ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்
இன்றைய இந்த காலத்தில் பிள்ளைகளின் திறைமை, தகுதி என்பதை வேறு வேறாக பார்க்க வேண்டும் திறமை உள்ள பிள்ளைகள் தங்களின் அடைவு மட்டத்தை அடைவதற்கு பொருளாதார பிரச்சனையை எதிர் நோக்குகின்றார்கள் பெரும்பாலான தாய் தந்தையர்களும் சேமிப்பு இல்லாமல் தங்களது பிள்ளைகள் அன்று மட்டும் மகிழ்வதற்கான செயற்பாட்டின் மூலமாக அவர்களின் தேவைகளை நிறைவு செய்கின்றார்கள் இதில் பிழை இல்லை இது பெற்றோர்கள் பிள்ளைகள் மீது வைத்திருக்கின்ற அன்பின் வெளிப்பாடு
இவர்களின் பிற்பட்ட கால கல்வியானது இவர்களின் வாழ்க்கையினை தீர்மானிக்கின்ற விடையமாக காணப்படுகின்றது இதற்கு சேமிப்பு பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தால் எதிர் காலத்தில் இவர்களின் கல்வியினை வளம்படுத்த பெரிதும் உதவும் இதற்கான முதற்கட்ட ஆரம்பமாக இன்று இவர்களுக்கான கணக்கு இலக்கம் தொடங்கப்பட்டு இவர்களின் கல்விக்கான ஒரு சேமிப்பை சனச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தொடங்கி வைப்பதில் பெருமகிழ் வடைகின்றேன் இது என்னாலான ஒரு முதற்கட்டமான சிறு உதவி தொடர்ந்தும் இந்த சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு என்னாலான பங்களிப்பினை செய்து வருவேன்
நிறைய பிள்ளைகள் என்னிடம் வந்து மேற்படிப்பை தொடர முடியாமல் தங்களது மேற்படிப்பிற்கு உதவுமாறு கோரிக்கை வைக்கின்றனர் என்னாலான உதவிகளை செய்தும் வருகின்றேன் இருந்தும் பெற்றோர்களாகிய நீங்களும் முன்வந்து இந்த சேமிப்பு பழக்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவீர்களானால் எதிர்கால சிறார்களின் கல்வி வளர்ச்சி என்பது மிகவும் சிறப்பாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை இதற்கான முயற்ச்சியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு எதிர்காலத்தில் சிறந்த கல்வி சமூகத்தை கட்டி எழுப்பி இந்த சிறார்களுடன் இன்னும் பல மாணவர்களின் கல்விக்கு வழிவிட்டுவளமான வழிகாட்டிகளாக இருந்து அவர்கள் சிறந்த கல்விமான்களாக வருவதற்கு எமது பங்களிப்பை தொடர்ந்தும் வழங்குவோம் என்பதுடன் இன்று இங்கு பரீட்சையில் சித்தி அடைந்திருக்கின்ற அனைத்து சிறார்களையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்தி அமர்கின்றேன்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்