திருமதி மோகனாங்கி சந்திரகுமார் (டிலாணி) மரண அறிவித்தல்

மட்டக்களப்பு நொச்சுமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மோகனாங்கி சந்திரகுமார் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று மட்டக்களப்பில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கனகசுந்தரம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், பாக்கியராஜா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சந்திரகுமார்(லண்டன்- கொலன்றியா) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவராஜ்(பிரான்ஸ்), ஜீவரேக்கா(லண்டன்), லக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சகாஜினி, பிருந்தாவன், சுபாஜினி, ரோஜினி, ஜெயாமதி, ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திரு. திருமதி நாகம்மா காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அமரசிங்கம் லக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-04-2017 வியாழக்கிழமை அன்று கல்லடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜீவா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33628412593
பிருந்தாவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447446105969
லக்‌ஷன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94756791076
பத்மராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779682099

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்