கத்தோலிக்க மக்களின் புனித பூமியாக வரலாற்றுச் சிறப்பு மிக்க மடுமாதா தேவாலயம் விரைவில் பிரகடனம்!! அமைச்சரவையும் அனுமதி..!

மன்­னார் மடுப் பகு­தியை கத்­தோ­லிக்­கர்­க­ளின் புனித பூமி­யாக அறி­விப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் அமைச்­ச­ர­வைக் கூட்­டம் அரச தலை­வர் செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது.மன்­னார் மடு­மாதா ஆல­யம் அமைந்­துள்ள மடுப்­ப­கு­தி­யினை கத்­தோ­லிக்­கர்­க­ளின் புனி­த­பூ­மி­யாக அறி­விப்­ப­தற்­கான அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்தை

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சமர்ப்­பித்­தார்.அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­துக்கு ஏக­ம­ன­தாக அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. விரை­வில் மடுப்­பி­ர­தே­சம் புனித பூமி­யாக அர­சி­தழ் ஊடாக அறி­விக்­கப்­ப­டும்.

அதே­வேளை, ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மடு­மாதா ஆல­யத்­த­துக்­குப் பய­ணம் மேற்­கொண்டு வழி­பா­டு­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்