ஆடி மாத வெள்ளிக்கிழமையில் வந்துள்ள சிறப்பான பூரணை தினம் இன்று!!

ஆடி மாதத்தில் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றுள்ளன.

ஆடிமாதத்தில் வரும் பூரணை தினம் இந்த வருடம் வெள்ளிக்கிழமையில் வந்துள்ளமை சிறப்புக்குரியது.

இந்த தினம் முருகப் பெருமானுக்கு சிறப்புக்குரிய நாள் என்பதால் கொழும்பு – ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் பக்தர்கள் பால்குட பவனி மற்றும் காவடி எடுத்திருந்தார்கள்.

மேலும், கொழும்பு, கதிரேசன் வீதியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்திலும் விசேட பூஜைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்