இளைஞர்களே…. குப்பையென தூக்கியெறியும் இந்தப் பொருளை தூக்கியெறியாமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

பூசணியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, அதன் விதைகளிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஆனால், அது தெரியாமல் பலரும் மஞ்சள் பூசணியின் விதைகளை தூக்கி எறிகிறோம். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் நீங்கள் அதை செய்யமாட்டீர்கள்.

பரங்கிக்காயின் விதைகளில் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீசு மற்றும் காப்பர் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. ஆண்கள் குறிப்பாக சாப்பிட்டால் தேவையான உடலுக்கு தேவையான சக்தி அதிகம் கிடைக்கும்.

மேலும், அதில் ஜிங்க், இரும்புச்சத்து மற்றுடம் புரோட்டீனும் வளமாக நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த பூசணி விதைகளை உங்கள் உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நீரிழிவு:
ஆய்வில், பூசணி விதைகள் இன்சுலின் சுரப்பை சீராக்கி, நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுவதாக தெரிய வந்துள்ளது.

தூக்கம்:
தூங்கும் சில மணிநேரங்களுக்கு முன் பரங்கிக்காய் விதைகளை ஃபுரூட் சாலட்டில் தூவி உட்கொண்டால், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.

குறிப்பு:
வீட்டில் வாங்கிய பரங்கிக்காயில் இருக்கும் விதைகளை எப்படி சாப்பிடுவது என்று பலரும் கேட்கலாம்.

அதற்கு அந்த விதைகளை உலர வைத்து, வாணலியில் போட்டு லேசாக வறுத்து, அதனுள் இருக்கும் சிறு பருப்பை உட்கொண்டு வாருங்கள்.

இது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இல்லாவிட்டால் பரங்கிக்காய் விதைகளானது அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும். அதை வாங்கி சாலட்டுகளில் தூவி உட்கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்