வடக்கு மாகாணத்தில் தற்கொலை அதிகரிக்க காரணமாகும் நுண்கடன்கள்

வடக்கு மாகாணத்தில் அதிகமாக இடம்பெறும் தற்கொலைக்கு காரணமாக நுண்கடன்கள் விளங்குவதாக உள நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் ஏனைய மாகாணாங்களை விட அதிகளவிலான வங்கி நுண்கடன்களை பெறும் மாகாணமாக விளங்குவது வடக்கு மாகாணம்.இதற்கு முக்கிய காரணம் 30 வருடம் இடம்பெற்ற போர்.வடக்கு மாகாணத்தில் தற்கொலை அதிகரிக்க காரணமாகும் நுண்கடன்கள்

போரின் காரணமாக தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்த மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறும் போது அங்கு அவர்கள் வாழ்வதற்கான பொருளாதாரம் என்பது கேள்விக்குறியாகின்றது.இந்த சந்தர்ப்பத்தில் வங்கிகளில் கடனுதவி பெறுவது என்பது சற்று கடினமாக இருந்தமையால் இந்த கடனுதவி பெறும் நிறுவனங்களை நாடி மக்கள் படையெடுக்க ஆரம்பிக்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட நிதி நிறுவனங்கள் சூட்சுமமான முறையில் அதிக வட்டிக்கு கடன் வழங்குகின்றன.எனினும் தவிர்க்க முடியாத காரணத்தால் அதிக வட்டி என்று தெரிந்து மக்கள் குறித்த நுண்கடன்களை பெற்று அல்லோல கல்லோலபடுகின்றனர்.

இந்நிலையிலேயே உதவி செய்பவர்கள் பாணியில் இந்த தனியார் நுண்கடன்கள் வழங்கும் நிறுவனங்கள் உள்நுழைந்தன.சாதாரண வட்டிகளை விட அதிக வட்டிகளையே அறவிடுகின்றன.12 வீதம் முதல் 25 வரை வட்டி வீதத்தில் நுண்கடன்களை வழங்கி மக்களின் வருமானங்களை சுரண்டுகின்றன.

நுண்கடன்கள் என்பது மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்கிவிப்பதற்காகவே வழங்கப்படுகின்ற நிலையில் இந்த நுண்கடன்கள் மக்களிடம் மேலும் கஸ்டங்களை ஏற்படுத்துகின்றன.

இதில் முக்கியமான விடயம் யாதெனில் தவணைப்பணத்தை செலுத்த முடியாத சந்தர்ப்பத்தில் தற்கொலை செய்யும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

இந்த விடயத்தில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.தம்மால் பணத்தினை கட்டமுடியும் என்ற சந்தர்ப்பத்தில் மாத்திரமே தம்மால் முடிந்தளவு தொகை எடுக்கவேண்டும்.

இதில் மக்கள் முதலில் உறுதியாக இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்