கண்கவர் கலைநிகழ்வுகள், வாண வேடிக்கைகளுடன் 2018 உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகள் கோலாகலமாக நிறைவு!!

21ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு மாஸ்கோவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

கடந்த ஜூன் 14 ஆம் திகதி உலகக் கோப்பை வாண வேடிக்கை, வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் ஆரம்பமானது. ஒரு மாதமாக மொத்தம் 32 நாடுகள் பங்கேற்றதுடன், 64 போட்டிகள் நடைபெற்றன.நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் – குரோஷிய அணிகள் இடையிலான இறுதி போட்டி நடைபெற்றது.

அதற்கு முன்னதாக நிறைவு விழா நடந்தது. இதில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அதிகாரப்பூர்வ பாடலான லிவ் இட் அப் என்ற பாடலை பாடி பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தார். அவருடன் பாடலை எழுதிய அமெரிக்க பாடலாசிரியர் நிக்கி ஜாம் கொளஸாவா கலைஞர் எரா இட்ரெபி ஆகியோரும் பாடினர்.

பின்னர் ரஷ்ய நாட்டு கலைஞர்களின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு நாட்டு அணிகள் வீரர்களின் படங்களுடன் நடனங்கள் அணிவகுப்பு நடைபெற்றது. ரஷ்யஜனாதிபதி விலாடிமீர் பூட்டின் 2022 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண போட்டி நடக்கவுள்ள கட்டார் நாட்டின் உதைப்பந்தாட்ட சமமேளனத்திடம் உலகக் கிண்ண ஜோதியை கையளித்தார்.

பிஃபா தலைவர் ஜியானி இன்பேன்டினோ, பிரான்ஸ் அதிபர் மெக்ரான், குரோஷிய அதிபர் கொலிந்தா கிராபர், ஆகியோர் நிறைவு விழாவில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்