ஆபாச வீடியோவால் வந்த வினை: சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த நான்கு சிறுவர்கள்!

உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் குழந்தையை நான்கு சிறுவர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேசம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள மஹாராஜாபூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயின் நான்கு வயது மகள் வீட்டுக்கு வெளிப்புறம் விளையாடி கொண்டு இருந்த நிலையில், அக்கம்பக்கம் வீட்டை சேர்ந்த ஆறு முதல் பத்து வயது கொண்ட நான்கு சிறுவர்கள், அந்த சிறுமியுடன் விளையாடுவதாக கூறி பக்கத்தில் உள்ள வெற்று பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்துள்ளனர்.

மேலும் அந்த சிறுவர்களிடம் ஒரு செல்போனும் இருந்துள்ளது. அந்த போனில் அந்தரங்க வீடியோ இருந்ததால், அந்த வீடியோவை பார்த்துக்கொண்டு, அதேபோல அந்த சிறுவர்கள் சேர்ந்து சிறு பெண் குழந்தையை கூட்டு பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ஏதும் அறியாத சிறுமி, அழுதுகொண்டே வீட்டிற்உ வந்துள்ளார். அப்பொழுது அந்த சிறுமிக்கு அந்தரங்க உறுப்பில் இருந்து ரத்தம் வந்துள்ளது.இதைப்பார்த்த பெற்றோர்கள் விளையாடும் போது எங்கியாவது கீழே விழுந்து அடிப்பட்டதால், ரத்தம் வருகிறது என நினைத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை அளிக்கபட்ட பிறகே பெற்றோர்களுக்கு உண்மை தெரிய வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் தனது மகளிடம் நடந்த நடந்ததைப் பற்றி கேட்டறிந்த பின்னர் அந்த சிறுமியின் தந்தை குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களின் குடும்பத்திடம் கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் சிறுமியின் தந்தை கூறியதை நம்பாமல், அவரை விரட்டி அடித்துள்ளனர்.

இதுகுறித்து கிராமவாசிகளிடம் புகார் செய்தார், பின்னர் பஞ்சாயத்து அழைக்கப்பட்டது. பஞ்சாயத்தில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு சிறுவர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அந்த சம்பவம் வீடியோ பதிவு செய்யப்பட்டு, மஹாராஜ்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்கள் சிறுமியின் பெற்றோர்கள்.

அந்த நான்கு சிறுவர்கள் மீதும் IPC மற்றும் POCSO சட்டத்தின் கீழ் வழக்கு செய்யப்பட்டு, தற்போது நான்கு சிறுவர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்