இலங்கையில் இளம் நடிகையின் வியக்க வைக்கும் செயற்பாடு…இலங்கையில் இப்படியும் ஒரு மனிதரா….?

இலங்கையில் மிருகங்கள் மீது அதிக அன்பு கொண்ட இளம் நடிகை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. 37 நாய்கள், 11 பூனைகள் மற்றும் மாடு ஒன்றை மரணத்தில் இருந்து காப்பாற்றி நடிகை ஒருவர் வளர்த்து வருகின்றார்.மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளம் தொலைகாட்சி நடிகையான சகுந்தலா என்பவரே இந்த சேவை செய்து வருகின்றார்.அவர் தனது சகோதரன் மற்றும் தாயாருடன் வாழ்ந்து வருகின்றார். மிருகங்களுக்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த வரும் ஒருவராகும்.37 நாய், 11 பூனைகள் மற்றும் மாடு ஒன்றை மரணத்தில் இருந்து காப்பாற்றி அவர் தனது வீட்டில் வளர்த்து வருகின்றார். இதற்கு மேலதிகமாக அவரால் காப்பாற்றப்பட்ட 4 மாடுகளை 4 வீடுகளுக்கு அவர் வழங்கியுள்ளதுடன், அதனையும் அவர் பாதுகாத்து வருகின்றார். 7 நாய்களையும் இதேபோன்று 7 வீடுகளுக்கு வழங்கியுள்ளார்.தனது வீட்டில் உள்ள பிராணிகளை மாத்திரமின்ற வீதிகளில் உள்ள நாய், பூனைகளுக்கு அவர் உணவு வழங்குகின்றார்.இந்த நாய், பூனைகளுக்காக அவர் 4 ஏக்கர் காணியை ஒதுக்கியுள்ளார். அனைத்து மிருகங்களும் ஒரே இடத்தில் வளர்த்து வருகின்றது. அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றன.அனைத்து மிருகங்களுக்கும் பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், பெயர் சொல்லி அழைத்தவுடன் அனைத்து மிருகங்களும் அருகில் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தான் சாதாரண குடும்பம் ஒன்றில் பிறந்தவர் எனவும், தனது வீட்டில் இடவசதி உள்ளது. எனினும், தனது வங்கி கணக்கில் 500 ரூபாயேனும் இல்லை அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்திற்காக ஒன்றையும் சேர்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த பெண் வாழ்ந்து வருகின்றார் என பலர் அவரைப் பாராட்டியுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்