வடக்கில் இன்னுமொரு மனிதப் புதைகுழி..? தோண்ட தோண்ட வரும் எலும்புக் கூடுகளால் மன்னாரில் பதற்றம்!!

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்பு அகழ்வு பணிகள் நேற்று 12 ஆவது நாளாக இடம் பெற்றது.இதன்போது நேற்று மாலை வேளையில் நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த பகுதியை சூழ்ந்து கொண்டமையினால் பதற்ற நிலை ஏற்பட்டது.நேற்றைய அகழ்வு பணியின் போது முழுமையான மனித எலும்புக்கூடு மற்றும் மண்டையோடுகள் என்பன மீட்கப்பட்டிருந்தன.மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேற்றைய அகழ்வு பணிகளை பார்வையிட்டு சென்ற நிலையில் மாலை 5.30 மணியளவில் நுற்றுக்கணக்கான மக்கள் அகழ்வு பணிகள் இடம் பெறும் இடத்தை சூழ்ந்து கொண்டதோடு, முழுமையாக மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு மற்றும் மண்டையோடுகளை பார்க்க எத்தனித்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கூடி நின்ற மக்களை பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றி நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் 13ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்