அங்கஜன் இராமநாதனது புதுவருட வாழ்த்து செய்தி

மலர்ந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் இனிமையான ஆண்டாக அமையட்டும் பழையன கழிதலும் புதியன புகுதலும் காலவழுவன்று உலகநியதியே என்ற பழந்தமிழரின் கூற்றுக்கு இணங்க மலருகின்ற புதிய ஆண்டில் தமிழ் மக்களுக்குடைய அவசர அவசிய தேவைகள், கனவுகள் நிறைவேற வேண்டும். அவர்களுடைய ஏக்கங்கள் துக்கங்கள் இந்த புதிய ஆண்டு களிய வேண்டும். ஈழத்தமிழ் மக்களின் வேண்டுகோள்கள் ஐக்கிய இலங்கைக்குள் இன்னமும் பழையனவாகவே இருக்கின்றன. நான் ஒரு அரசியல்வாதி என்பதர்க்கும் அப்பால் யாழ்மண்ணின் மைந்தன் என்ற ரீதியில் தமிழ் மக்களின் சேவகன் என்ற ரீதியில் எமது மக்களின் அவசர தேவைகளான வேலைவாய்ப்பு மீள்குடியேற்றம் விதவைகள் மறுவாழ்வு போராளிகளின் புனர்வாழ்வு போன்ற விடயங்களில் காலதாமதமின்றி செயற்பட்டு வருகின்றேன். ஈழத்தழிழர்களின் அரசியல் தேவைகளை இந்த புதிய ஆண்டிலும் நிவர்த்தி செய்யும் இந்த நல்லாட்சி அரசு என தமிழ் மக்கள் நம்பும் இவ்வாட்சியில் அரசியல் கட்சி பேதமின்றி தமிழ் அரசியல் வாதிகள் அனைவரும் ஒரு புள்ளியில் சந்தித்தால் நிச்சயமாக நாம் எமது தேவைகளை வென்றெடுக்கலாம் அதற்க்கு இன்று பிறந்திருக்கும் இவ் ஆங்கில புத்தாண்டு தமிழர்களுக்கு அனுகூல காலமாக அமையும் என நம்பிக்கை கொள்வதோடு அனைத்து தமிழ் மக்களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்