மாகாண மட்ட கூடைப்பந்தாட்டத்தில் யாழ் இந்து இரட்டைச் சம்பியன்….!!

வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டத் தொடர் யாழ்ப்பாணம் பழைய பழைய பூங்கா கூடைப்பந்தாட்டத் திடலில் நடைபெற்று வருகின்றது.நேற்று முன்தினம் நடைபெற்ற 17 வயதின் கீழ் பிரிவு இறுதி ஆட்டத்திலும், நேற்று நடைபெற்ற 20 வயதின் கீழ் பிரிவு இறுதியாட்டத்திலும் யாழ் இந்துக் கல்லூரி அணிகள் வெற்றி பெற்று சம்பியனாக வரலாறு படைத்துள்ளன.

நேற்று நடைபெற்ற 20 வயதுப் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியை எதிர்த்தாடிய இந்துக் கல்லூரி அணி 55:53 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, ஐந்து வருடங்களின் பின்னர் மாகாண மட்ட சாம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.அதே வேளை  நேற்று முன்தினம் நடைபெற்ற 17 வயதுப் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் யாழ் இந்துக் கல்லூரி அணி, யாழ் மத்திய கல்லூரியை எதிர்த்தாடி வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.2013ஆம் வருடத்திற்கு பின்னர் 17 மற்றும் 20 வயதின் கீழ் பட்ட கூடைப்பந்தாட்ட அணி மாகாணமட்ட சம்பியன்களாக வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த வரலாற்று சாதனையை பதிவு செய்த வீரர்களுக்கு எமது அன்பான வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்