2017 இல் மிதுன ராசியினருக்கான முழுமையான சிறப்பு பலன்கள்…

பொதுவாக நற்பலன் தரக்கூடிய குரு மற்றும் தீய பலன் தரக்கூடிய சனியின் கோசார நிலையைக் கொண்டு புத்தாண்டில் நிகழக்கூடிய நல்ல கெட்ட பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. கோசார கிரகங்களின் நற்பலன்களை அதிகப்படுத்திக்கொள்ளவும் தீய பலன்களை குறைத்துக் கொள்ளவும் அன்பர்கள் அவரவர்களின் இஷ்ட தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.

மிதுன ராசிக்காரர்களே!
இந்த ஆண்டு துவக்கத்தில் நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் பொருளாதார நிலை நன்றாக இருக்கும் ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் சுபஸ்தானத்திற்கு வருவது தொழிலில் இருந்து வந்த தடை நீங்கி சிறப்படைய வைக்கும். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சி சுப அசுப பலன்களை கலந்து கொடுக்கும். செப்டம்பர் மாதம் குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். இந்த ராசி மாற்றமானது பொருளாதார வகையில் மிகவும் சிறப்பைக் கொடுக்கும்.

ஜனவரி – இடமாற்றம்
ஆண்டின் துவக்கத்தில் ஏழாமிடத்தில் இருக்கும் சூரியன் இடமாற்றத்தை தருவார். இம்மாதம் 14ம் தேதி எட்டாமிடத்திற்கு சூரியன் வருகிறார் உத்தியோகத்தில் மன உளைச்சலை கொடுப்பார். செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி பத்தாம் இடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்களுக்கு தொழில் சிறப்படையும் புதன் இம்மாதம் முழுவதும் ஏழாம் இடத்தில் இருப்பது தரகு கமிஷன் தொழிலில் ஈடுப்பட்டிருப்பவர்களுக்கு தொழிலில் மேன்மை நிலையைக் கொடுக்கும். குரு நான்காம் இடத்திலிருப்பது பணவரவு சரளமாக இருக்கும் சுக்கிரன் ஒன்பதாமிடத்திலிருப்பது குலதெய்வ அருள் அதிகரிக்கச் செய்யும் இம்மாதம் 27ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் வியாபாரம் உத்தியோகம் மேன்மையடையும் சனி வருட ஆரம்பத்தில் ஆறாமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி தேதி ஏழாமிடத்திற்கு வருவது தொழிலில் இருந்து வந்த தடை தாமதங்களை நீக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருப்பது அடிக்கடி பயணங்களைக் கொடுக்கும் கேது ஒன்பதாமிடத்திலிருப்பது ஆன்மீகத்தில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

பிப்ரவரி – வியபார விருத்தி
சூரியன் இம்மாதம் 13ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும் புதன் இம்மாதம்03ம் தேதி எட்டாமிடத்திற்கு வருவது வியாபாரத்தில் தொல்லையை உண்டாக்கும் 22ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருவது தொல்லையைக் குறைத்து வியாபார விருத்தியைத் தரும். செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் – தொழில் சிறப்பு
சூரியன் இந்த மாதம் 14ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் பிரமோஷன் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் செவ்வாய் 02ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும் புதன் 11ம் தேதி பத்தாமிடத்திற்கு வருவது தரகு கமிஷன் தொழில் சிறப்படைய வழி வகுக்கும் 27ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் எண்ணியவை யாவும் எளிதில் எண்ணியபடி நடக்கும். குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் – சம்பள உயர்வு
சூரியன் இந்த மாதம் 14ம் தேதி பதினொன்றாம் இடத்திற்கு வருகிறார் சம்பள உயர்வு எதிபார்த்திருந்தவர்களுக்கு சம்பள உயர்வும் தொழிலில் லாபமும் கிடைக்கும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வீடு நிலம் போன்ற வகைகளில் செலவுகள் அதிகரிக்கும். புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே – உடல் உஷ்ணம் அதிகரிக்கும்
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி பன்னிரெண்ட்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் கோபம் அதிகரிக்கும் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் அழகு ஆடம்பரப் பொருட்கள் தொடர்பான தொழில் மூலம் லாபம் அதிகரிக்கும். இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் – வெற்றி கிடைக்கும்
இந்த மாதம் சூரியன் 15ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை தேடி வரும் புதன் இந்த மாதம் 03ம் பன்னிரெண்டாம் இடத்திற்கு வருகிறார் செலவுகள் அதிகரிக்கும் 18ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள் சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை – வசீகரம் அதிகரிக்கும்
சூரியன் இந்த மாதம் 17ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும் செவ்வாய் 11ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் மின்சார உபகரணங்கள் சம்பந்தமான தொழிலில் பண வரவு அதிகரிக்கும் புதன் இந்த மாதம் 03ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் 21ம் தேதி மூன்றாமிடத்திர்கு வருகிறார் வெளியூரிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும் சுக்கிரன் 26ம் தேதி உங்கள் ஜென்மராசிக்கு வருகிறார் முக வசீகரம் அதிகரிக்கும் இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் – பணவரவு அதிகரிக்கும்
சூரியன் 17ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அரசுமுறை பயணம் உண்டாகும் செவ்வாய் 27ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும் சுக்கிரன் 21ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பொன்னாபரணங்களின் சேர்க்கை அதிகரிக்கும் ராகு 18ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பண வரவு அதிகரிக்கும் கேது 18ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருக்கவும். இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் – குருவால் நன்மை
சூரியன் 17ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசு வாகன யோகம் உண்டாகும் செவ்வாய் 13ம் தேதி நான்காமிடத்திர்கு வருகிறார் நிலம் வீடு போன்றவை வாங்குவீர்கள் புதன் 27ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும் குரு 12ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் பண வரவு அபரிமிதமாக இருக்கும் சுக்கிரன் 15ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அண்டைஅயலாரால் நன்மை உண்டாகும் இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் – அதிர்ஷ்டம் உண்டாகும்
சூரியன் பதினெட்டாம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் செவ்வாய் 30ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் பூர்வீகமான நிலம் வீடு போன்ற சொத்துகளில் இருந்து பங்கு கிடைக்கும் புதன் 30ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் தொழில் சிறப்படையும் சுக்கிரன் 15ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும் இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் – உல்லாச பயணம்
சூரியன் 17ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் உயர் அதிகாரிகளால் தொல்லை உண்டாகும் புதன் 02ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும் 24ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் வியாபாரம் விருத்தியாகும். சுக்கிரன் 03ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள் 26ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் வாழ்க்கைத்துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் – தம்பதியர் அன்னியோன்னியம்
சூரியன் 16ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அரசு ஊழியர்களுக்கு நீண்ட தூரத்தில் இட மாற்றம் உண்டாகும் சுக்கிரன் 20ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்