ஜே.கே றீம்ஸ் நிறுவனத்தினால் பயனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு!!

ஜே.கே.றீம் நிறுவனத்தினரின் 2ம் ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு 15 பயனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன் தலைமையில் ஹரிபோல் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.இங்கு நிறுவன அதிபரும் தவராசா துவாரகனின் நண்பருமான ஜே.கயாணன் மற்றும் ஊழியர்கள் இளைப்பாறிய பிரதேச செயலர் தேவராசா,  இளைப்பாறிய முகாமையாளர் அரசகுமார் (இலங்கை வங்கி ) மற்றும் பலரும் கலந்து கொண்டனர். வலி தெற்கு பிரதேசத்தில் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு கோழிக் கூடு மற்றும் கோழி குஞ்சுகள்,சுத்தமான உணவு சந்தைப்படுத்துபவர்களுக்கான வாழ்வாதார உதவிகள், மின்சாரம் இல்லாத வீட்டில் வாழும் மாணவர்களுக்கான சாச்சர் மின்குமிழ்கள் சுய தொழில் செய்பவர்களுக்கான உபகரணங்கள் மற்று கொட்டகையில் வசிக்கும் குடும்பங்களுக்கான தறப்பால்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்